கோவை: வால்பாறையில் கடமான் கறி சமைத்துச் சாப்பிட்ட நான்கு பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, கரடி, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் சிறுத்தை, புலி, செந்நாய்கள் போன்றவை தங்கள் உணவுக்காக மான்களை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம். அவை தின்றதுபோக மீதி இறைச்சியை விட்டுவிட்டு திரும்ப வந்து சாப்பிடுவது வாடிக்கை. இந்நிலையில் இந்த இறைச்சியைப் பார்க்கும் பொதுமக்களில் சிலர் அவற்றை எடுத்துச் சென்று வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகம் ஆக மாற்றப்பட்ட பின் இந்த இறைச்சிகளை எடுத்துச் சென்று சாப்பிட தடை விதிக்கப்பட்டது. மேலும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறையில் உள்ள டாடா காப்பி தேயிலைத் தோட்டத்தில் ஒரு சிலர் மிருகங்கள் வேட்டையாடி விட்டுச்சென்ற மான் இறைச்சியை எடுத்துச் சென்று சமைத்துச் சாப்பிட்டதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன், வனவர் முனியாண்டி சக்திவேல் மற்றும் வன உயிரின பாதுகாவலர் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வரட்டு பாறையைச் சேர்ந்த செல்வராஜ், சின்னசாமி, ஏழுமலை, ராம்குமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்களிடமிருந்து மான்கறி மற்றும் அவற்றின் தலை, தோல், கால் பகுதிகள் மீட்கப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின்பேரில் நான்கு பேருக்கும் தலா 25,000 வீதம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.