கோவை: ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முடியாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுகவின் சகாப்தம் 2021ல் முடிந்துவிடும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜக்கார்பாளையம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நகைக்கடனை தள்ளுபடி செய்கிறோம் என்று பொய்யான பிரச்சாரத்தை திமுக செய்து வெற்றி பெற்றார்கள்.
இலவச மின்சாரத் திட்டத்தை திமுக கொண்டு வரவில்லை, மத்திய அரசு கொண்டுவந்த திட்டம். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகள், தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை வழங்க உரிமையுள்ளது. இலவச மின்சாரத்தை ஒருபோதும் மத்திய அரசு ரத்து செய்வோம் என்று சொல்லவில்லை. இலவச மின்சாரத்தை ரத்து செய்யவும் மாட்டோம். மாநில அரசுகள் மின்சாரம் தொழிற்சாலைகளுக்கு பொது விநியோகத்திற்கு வழங்குகிறது என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு கூறியுள்ளது, இதை மக்களிடம் திமுக தவறாக பிரச்சாரம் செய்து வருகிறது என்றார்.
அரசியல் களத்தில் 10 ஆண்டுகள் திமுகவை ஒதுக்கி விட்டார்கள், 15 வருடத்திற்கு மக்கள் ஒதுக்கப் போகிறார்கள். 2014ம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் திமுகவிற்கு ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை, அலைக்கற்றை ஊழல், சுரங்க ஊழல் போன்ற பல்வேறு ஊழல்களை செய்த ஊழல் கட்சி திமுக, ஆக்கப்பூர்வமாக அரசியல் செய்ய முடியாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வேளாண் சட்டத்தினால் விவசாயிகள் நிலத்தை கார்ப்பரேட் எடுத்துக் கொள்வார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து அரசியல் செய்கிறார்கள்.
வரும் 2021க்கு பிறகு திமுகவின் சகாப்தம் முடிந்து விடும் எனவும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எல் முருகன் கூறிய கருத்து, தேசிய தலைமை தான் கூட்டணி பற்றி முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். அதிமுக உடன் இணக்கமாக நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை. இரு கட்சி தலைமையிலும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்தக் குழப்பமும் இல்லை, கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது இது குறித்து பேசுவது சரியாக இருக்காது.
மேலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை அதிமுக ஆதரித்துள்ளது. எனவே, பாஜக அதிமுக இடையே கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.