கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து மக்களின் அத்தியாவசிய தேவையாக எரிபொருள்கள் உள்ள நிலையில், மத்திய அரசு சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மானியத்தை விட்டுத் தரக்கோரி மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, சிலர் அதனை விட்டுக் கொடுத்த நிலையில், மற்றவர்களுக்கு மானிய தொகை வங்கிகளில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதனை மத்திய அரசு நிறுத்தியது.

ஒரு சிலிண்டரின் விலை 600 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு மாத காலத்திற்குள் மட்டும் 100 ரூபாயை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் விலையை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மீனா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட செயலாளர் சரஸ்வதி புஷ்பராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் வானதி நாகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் பங்கேற்றனர்.