கோவை: கோவையில் வீட்டு மனை வேண்டியும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூகம் இலவச வீட்டு மனை ஒதுக்கித் தர வேண்டியும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, மத்திய அரசு உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில் இலவச வீடு ஒதுக்கித் தருமாறு 300 மனுக்களை அளித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மகளிர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.