தமிழக அரசு வழங்கும் பொங்கல் இலவசத்தை நான் ஆதரிக்கிறேன்..! சிலர் தவறாக சித்தரிக்கின்றனர் - முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ட்வீட்!

கோவை: தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் இலவசத்தை சிலர் தவறாக சித்தரிப்பதாகவும் ஆனால், தான் அதை வரவேற்பதாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.



கோவை: தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் இலவசத்தை சிலர் தவறாக சித்தரிப்பதாகவும் ஆனால், தான் அதை வரவேற்பதாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க பாஜக துணைத் தலைவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழக அரசு வழங்கக் கூடிய பொங்கல் பணம் 2 ஆயிரத்து 500 நான் வரவேற்கிறேன். ஒரு சிலர் அதை தவறுதலாக தேர்தலுக்கு பணம் கொடுப்பதாக கூறி அரசியல் ஆதாயம் தேட பார்ப்பதாகவும் கொரோனா காலத்தில் மக்களுக்கு இந்த பணம் மிகவும் உதவியாக இருக்கும். நான் அதை வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.

பொங்கலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து சில ஊடகங்கள் கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள்.

பொங்கலுக்கு கொடுக்கும் தொகையை முதலமைச்சர் அவர்கள் ரூபாய் ஆயிரத்திலிருந்து, இரண்டாயிரத்து ஐந்நூறாக உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். கொரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்த பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள்.

நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும். வாழ்க, வளர்க தமிழ்நாடு.

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...