கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மாற்று திறனாளிகளுக்கான உதவித் தொகையை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை 5000 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் எனவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும், அரசு வேலைகள் வழங்கிட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து ஊன்றுகோல் அறக்கட்டளை நிறுவனர் கருணாகரன் கூறுகையில், "இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதாகவும் தங்களுக்கு அரசு தற்போது வழங்கி வரும் உதவித்தொகை 1000 ரூபாயை 5000 மாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல, இலவச வீட்டுமனை பட்டாவிற்கு ஒன்றரை லட்சம் கேட்பதாகவும் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு இன்னும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறவில்லை என்றார்.

மேலும், செப்டம்பர் 22ம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற போது வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால், மனு அளித்து இரண்டு மாதங்களாகியும் எவ்வித பதிலும் இல்லை. எனவே, அரசு உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும்," என்றார்.