நகைச் சீட்டு நடத்தி பல கோடி சுருட்டிய நகைக்கடை அதிபர்: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி! ஆடம்பரத்தால் அழிவை நோக்கிச்சென்றார்!!

கோவை: தாராபுரத்தில் நகைக்கடை வைத்து நடத்தி பொதுமக்களிடம் நகைச் சீட்டு பிடித்து மோசடி செய்து தலைமறைவான நகைக்கடை அதிபர் குடும்பத்தினருடன் திருச்சி லாட்ஜில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

கோவை: தாராபுரத்தில் நகைக்கடை வைத்து நடத்தி பொதுமக்களிடம் நகைச் சீட்டு பிடித்து மோசடி செய்து தலைமறைவான நகைக்கடை அதிபர் குடும்பத்தினருடன் திருச்சி லாட்ஜில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பொள்ளாச்சி சாலை, சின்னக்கடை வீதியில் வெங்கட்ராமன் செட்டியார் என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ஹரிஹரன், இவரது தந்தை பலராமன். இவர் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் உள்ளார். இவரது மனைவி புஷ்பா, ஹரிஹரனின் மனைவி திவ்யா. இவர்களுக்கு 5 வயதில் அஸ்வதி என்ற மகள் உள்ளார்.

ஹரிஹரன் குடும்பத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் நகைக்கடை திறந்தனர். அந்தக் கடையில் மாதாந்திர தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் குலுக்கல் முறையில் கார், இருசக்கர வாகனங்கள், தங்க நகைகள் என கவர்ச்சியான பரிசுப்பொருட்களை திரைப்பட நடிகைகளைக் கொண்டு பரிசாக வழங்கி வந்தனர். இதனால் தாராபுரத்தைச் சுற்றியுள்ள ஏராளமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மாதத் தவணையாக செலுத்தி வந்தனர்.

இதுதவிர தாராபுரத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், இந்த நகைக் கடையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் ஹரிஹரன் தவித்தார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி முதல் திடீரென நகைக் கடை அடைக்கப்பட்டு இரண்டு நாள் விடுமுறை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் நகைச் சீட்டில் பணம் போட்டு ஏமாந்துவிட்டதை உணர்ந்த மக்கள் பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்துநகைக்கடை அதிபர் ஹரிஹரன் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். அத்துடன் அவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

கடந்த 18-ம் தேதி தாராபுரத்தில் இருந்து திருச்சிக்கு வந்து மண்ணச்சநல்லூர் அருகே துறையூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மனைவி திவ்யா, மகள் அஸ்வதி, தந்தை பலராமன், அவரது மனைவி புஷ்பா ஆகியோருடன் தங்கினார். திருச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவில் விடுதிக்கு வந்து தங்கினர். நேற்று காலை ஊழியர்கள் சென்று பார்த்தபோது அறையில் ஹரிஹரன் உள்ளிட்ட குடும்பத்தினர் தூங்குவதுபோல் கிடந்தனர். அருகில் நகைக்கு பாலிஷ் போடும் ஆசிட் பாட்டில் திறந்து கிடந்தது. சத்தம் போட்டும் எந்த பதிலும் இல்லாததால் விடுதி மேலாளர் வாத்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து அவர்களை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் ஹரிஹரனின் நகைக்கடையில் பல கோடி ரூபாய் பணம் முதலீடு செய்ததாக தெரிகிறது. அதற்கான பணத்தைப்பெற அந்த முக்கிய பிரமுகரின் ஆட்கள் கடைக்கு வந்து தினசரி விற்பனையாகும் தொகையை பெற்றுச் சென்றதும் அசலுக்கு கடையில் இருந்த நகைகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதனால் நகைச் சீட்டு போட்டவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் ஹரிஹரன் திணறியது தெரியவந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஹரிஹரன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஹரிஹரனைப் பற்றி அவருடைய உறவினர்கள் கூறும்போது:- கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனக்கு அனுபவமே இல்லாத நகைக் கடை தொழிலை தேர்வு செய்தார். இதற்காக தன் தந்தை பலராமனிடம் சண்டை போட்டு சொத்தைப் பிரித்து வாங்கிக்கொண்டு திடீரென கடை திறந்தார். நகைக்கடை நடத்துவதற்கான எந்த முன் அனுபவமும் அவருக்குக் கிடையாது. நகையை எப்படி விற்பனை செய்வது, நகையை எப்படி செய்து வாங்குவது, மொத்தமாக எப்படி தங்கக் கட்டிகளை வாங்குவது என்பது தெரியாமல் எல்லாம் மொத்த வியாபாரிகளிடம் பல கோடி மதிப்பில் நகைகளை தவணைக்கு பெற்றுள்ளார்.

மேலும் கிடைக்கும் பணத்தைக்கொண்டு மனைவி மற்றும் குடும்பத்தினடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதுபோக நகைக்கடையில் குலுக்கல் முறையில் நகைச்சீட்டு நடத்தக்கூடாது என்று அரசு சட்டம் இயற்றி உள்ளது. அதையும் அவர் முறையாகப் பின்பற்றவில்லை. 

கார், பைக், குக்கர், மிக்ஸி என குலுக்கல் முறையில் கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை தன்வசப்படுத்தினார். மக்களைக் கவர்வதற்காக திரைப்பட நடிகை ஓவியா உள்பட பலரை வரவழைத்து குலுக்கல் முறையில் பொருட்களை கொடுத்து வந்துள்ளார். ஆடம்பர மோகத்தால்அழிவை நோக்கிப் பயணமானார்.

`தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்' என்ற பழமொழி ஹரிஹரனுக்கு தெளிவாகப் பொருந்துகிறது. இதனாலும் பல கோடி கடனில் சிக்கிய ஹரிஹரன் வேறுவழியில்லாமல் தவித்தார். மக்கள் தொடர்ந்து கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதையடுத்து என்ன செய்வதென தெரியாமல் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று திடீரென திருச்சியில் தற்கொலை செய்ய முயன்றது தாராபுரம் கோவை பகுதியில் பணம் கொடுத்தவர்கள் மத்தியிலும் பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...