கோவை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க முன்னாள் செயலாளரும், கோவை மாநகராட்சி முன்னாள் மேயருமான கணபதி ப.ராஜ்குமார் அக்கட்சியிலிருந்து விலகி, தி. மு.கவில் இணைந்தார்.
கோவை: கோவை அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான ராஜ்குமார் அதிமுகவிலிருந்து விலகி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மு. க ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கோவையில் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ராஜ்குமார் தொடர்ந்து சிறந்த முறையில் செயல்பட்டு வந்தார். கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கோவை மாநகராட்சி மேயராக வேலுச்சாமி பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், ஒருநாள் சூலூரில் இருந்து காரில் வந்தபோது, மேயர் வேலுச்சாமி கார் ஒரு நபர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தவுடன் விபத்தில் காயம்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்க்காமல் அவர் வீடு திரும்பினார். இந்த தகவல் உளவுத்துறை மூலமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அன்று இரவே வேலுச்சாமி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த மூன்று மாதத்தில் கோவை மாநகராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த ராஜ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று 2014 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் மாநகராட்சி மேயராக பதவி வைத்தார்.
அதன் பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு தொடர்ந்து நடைபெற்ற அரசியல் மாற்றத்தின் காரணமாக அதிமுகவில் தீவிரமாக செயல்படுலிருந்து விலகி இருந்தார். எடப்பாடி அணி, பன்னீர்செல்வம் அணி என இருவரும் பிரிந்து செயல்பட்டபோது ராஜ்குமார் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தன்னுடைய பேட்டியளித்தார். அதன்பிறகு தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக அதிமுகவிலிருந்து எந்தவிதமான செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் சென்னைக்குச் சென்று திமுக தொண்டர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு. க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். உடன் பொருளாளர் துரைமுருகன். சிங்கானல்லுர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.
திடீரென ராஜ்குமார் அதிமுகவில் இணைந்தது கோவையில் உள்ள அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.