கோவை: கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனியைச் சேர்ந்தவர் அஜீத் ராஜா. தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு திருப்பதி சென்றபோது திருப்பூர் சங்கரமநல்லூர், அண்ணா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது அவர்கள் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு ஒன்றாக வந்தனர்.

அப்போது அஜீத் ராஜாவிடம், நான் வருமானவரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றுகிறேன். எனக்கு அரசு அதிகாரிகள் பலரைத் தெரியும்' என்று மணிகண்டன் கூறியுள்ளார். எனவே அஜீத் ராஜா தனக்கு அரசு வேலை வேண்டும் எனக் கூறி பல கட்டமாக மணிகண்டனிடம் 4.5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.
ஆனால் அவர் அரசு வேலை எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தைத் கேட்டபோது திருப்பிக் கொடுக்கவும் இல்லை. தொடர்ந்து அவரை மிரட்டி வந்துள்ளார். ஒருகட்டத்தில் மணிகண்டன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதுகுறித்து அஜீத் ராஜா செல்வபுரம் போலீசில் நேற்று புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.