கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் நீரேற்று திட்டப்பணிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார்

கோவை: கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் உள்ள காடு குட்டையை சீரமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கள்ளப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் செட்டிபாளையம் சுற்று வட்டார விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் உள்ள காடு குட்டையை சீரமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கள்ளப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் செட்டிபாளையம் சுற்று வட்டார விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், செட்டிபாளையம் காடு குட்டையில் நிலத்தடி நீரை செரிவூட்ட, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் காடு குட்டைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி, பொதுப்பணிதுறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை இணைந்து அப்பணிகளை துவக்க உள்ளனர். இதற்காக, கோவை ரூ.4.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.



இந்நிலையில், இந்த காடு குட்டை நிலத்தடிநீர் செரிவூட்டும் திட்டப்பணிக்கான, பூமி பூஜையை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், மதுக்கரை பேரூராட்சி கழகச்செயலாளர் சண்முகராஜா, மதுக்கரை ஒன்றிய கழக செயலாளர் சதீஸ்குமார், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...