நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய கரடி..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் உலா வந்த கரடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அதை சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் உலா வந்த கரடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அதை சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை, அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் உள்ள பஜார் பகுதி, போலீஸ் கேம்ப், குடியிருப்பு பகுதி உள்ளிட்டப் பகுதியில் கடந்த சில நாட்களாக, ஒரு ஒற்றைக் கரடி சுற்றி வந்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உலா வந்த கரடியால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வந்த நிலையில், அங்கே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி, அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அந்த கரடி மனிதர்களை தாக்கும் முன், அதை கூண்டு அமைத்து, பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...