கோவை: கொரோனோ தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் ஆன்லைனில் நடக்கின்றன. பிள்ளைகளின் படிப்புக்காக பலர் புதிதாக செல்போன் வாங்கியிருக்கின்றனர். பல மாணவ-மாணவிகள் படிக்கும் நேரம் தவிர மற்றநேரங்களில் சமூக வலைதளங்களில் மூழ்கி தவறான பாதையில் செல்கின்றனர். 10-ம்வகுப்புமாணவி ஒருவர் பேஸ்புக்கில் நட்புகொண்டு காதலில் விழுந்தார்.இதையடுத்து அவரைப் பார்ப்பதற்காக சென்னைக்கு ஓட்டம்பிடித்தார்.

கோவையைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்காக மாணவியின் பெற்றோர் புதிதாக செல்போன் வாங்கிக் கொடுத்தனர். அதன்மூலம் அந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார்.
இந்த மாணவியோ வகுப்புகள் முடிந்ததும் செல்போனை எடுத்து வைக்காமல் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கினார். பெற்றோர் எவ்வளவோ கூறியும் அந்த மாணவி கேட்கவில்லை.
எப்போதும் செல்போனையே பயன்படுத்தி வந்த அப்போது அவருக்கு பேஸ்புக் மூலம் சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். நண்பர்களாகப் பழகத் தொடங்கிய அவர்கள் ஃபேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பி பேசி வந்தனர். பின்னர் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்ட அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மணிக்கணக்கில் பேசி வந்தனர்.
இந்நிலையில் திடீரெனஒருநாள் அந்த வாலிபர் மாணவியிடம், `நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன், சென்னைக்கு வருகிறாயா?' என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவியும் வருகிறேன் என உறுதியளித்துள்ளார்.
சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்குச் சென்று விட அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறினார். மாலையில் வீடு திரும்பிய பெற்றோர் மகளைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். அப்போது அவர்களில் ஒருவர் உங்களது மகளை கோவை ரயில் நிலையத்தில் பார்த்தேன், எங்கே செல்கிறாய் என விசாரித்தபோது தோழியைப் பார்க்க சென்னை செல்வதாகச் சொன்னதாகக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கோவை ரயில் நிலையம் வந்து தேடினார். ஆனால் அங்கு அவரைக் காணவில்லை.
இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு இபதிவு செய்து மாணவி சென்னைக்குச் சென்றாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.