வரும் 21ம் தேதி வானியல் திருவிழா..! வியாழன், சனி கோள் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு குறித்த கலந்துரையாடல்!

கோவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கற்பகம் பல்கலைக்கழகம் மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் இணைந்து வரும் 21ம் தேதியன்று திங்கள் மாலையில் வியாழன் மற்றும் சனி கோள்கள் நேர்கோட்டில் சந்திக்கும் அற்புத வான்நோக்கு நிகழ்வுகள் குறித்து அறிவதற்கான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கற்பகம் பல்கலைக்கழகம் மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் இணைந்து வரும் 21ம் தேதியன்று திங்கள் மாலையில் வியாழன் மற்றும் சனி கோள்கள் நேர்கோட்டில் சந்திக்கும் அற்புத வான்நோக்கு நிகழ்வுகள் குறித்து அறிவதற்கான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் மெகபுனிஷா, மாநில வெளியீட்டு இணை ஒருங்கிணைப்பாளர் முஹமது பாதுஷா,மாநில வானியல் கருத்தாளர் ரமேஷ் மாவட்டத் தலைவர் ரிஷி சரவணன், மாவட்ட செயலாளர் ஶ்ரீராமகிருஷ்ணன் மற்றும் கோவை மண்டல அறிவியல் மைய மண்டல அறிவியல் அலுவலர் பழனிச்சாமி, கற்பகம் கல்லூரியின் ஆஸ்ட்ரானமி கிளப் கன்வீனர் பேராசிரியர் முனைவர் எஸ். இசக்கிமுத்து மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் இ. சிவசெந்தில் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.

இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். இந்நிகழ்வில் தொலைநோக்கி மூலமாக வான்நோக்கு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. மேலும், விளக்கமும் வழங்கப்பட உள்ளது.

சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற இருக்கும் இந்த அரிய நிகழ்வை அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்று அறிவியல் இயக்கம் அன்போடு அழைக்கிறது. வியாழன் மற்றும் சனி கோள் நேர் கோட்டில் வருகிறதே தவிர இணைவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.

எனவே, கோள்கள் மோதுவதற்கும், அதனால் பெரும் விளைவுகள் ஏற்படுவதற்கும் எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை. மக்களும் அச்சப்பட தேவையில்லை. அனைவரும் வரும் 21ம் தேதி திங்கள் கிழமை மாலை 6.30 மணி 7.30 மணி வரை வியாழன், சனி கோள்களை நேரடியாகக் காணலாம். கெரோனா காலம் என்பதால் முகக் கவசத்தோடு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்பதிவு அவசியம். மேலும் தொடர்புக்கு:- 94866 54416

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...