கோவை கூட்செட் சாலையில் போக்குவரத்து நெரிசல்..! 'திடீர்' பள்ளத்தை சீர் செய்யும் பணிகளில் மந்தம்..!

கோவை: கடந்த 13ம் தேதி, கோவை கூட்செட் சாலையில் செல்லும் அவினாசி ரோடு மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில், இடதுபுறத்தில் திடீரென 3 அடி ஆழ பள்ளம் தோன்றியது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.



கோவை: கடந்த 13ம் தேதி, கோவை கூட்செட் சாலையில் செல்லும் அவினாசி ரோடு மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில், இடதுபுறத்தில் திடீரென 3 அடி ஆழ பள்ளம் தோன்றியது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.



மந்த நிலையில் சீரமைக்கும் பணிகள்..!

இதனிடையே, ஒரு வாரம் முடிந்தும் பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் மந்த நிலையில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன், காரணமாக கூட்செட் வழியாக நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை, புரூக் பாண்ட் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மேம்பாலம் கீழ் பகுதி சர்வீஸ் சாலை வழியாக செல்ல முடியாமல், மேம்பாலத்தின் மேல் பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

அவினாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

இதனால் அவினாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் உண்டாகுகிறது.

இதுபகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:‘‘அவினாசி மேம்பாலம் அருகே உள்ள சாலைகளின் வழியாக பாதாள சாக்கடை செல்கிறது. இதில், 600 மி.மீ அளவிலான பழைய பாதளா சாக்கடை குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்றி 40 மீட்டர் தூரத்திற்கு புதிய குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...