சட்டமன்ற தேர்தல்: மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை - மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்!

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. 

இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக கோவைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் 1000 எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று நடவடிக்கைகள் காரணமாக கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. அங்கிருந்து மொத்தம் 6,940 பாலட் இயந்திரங்கள், 5,670 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 6,330 வி.வி.பேட் இயந்திரங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட சுகாதார துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்ய பெல் நிறுவனத்தின் இருந்து என்ஜினீயர்கள் வரவழைக்கப்படுவார்கள். பரிசோதனையின் போது சரியாக செயல்படாத இயந்திரங்கள் தனியாக வைக்கப்படும்,’’ என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...