திருப்பூரில் ரூ.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு!

திருப்பூர்: திருப்பூரில் 37 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று திறக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் 37 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று திறக்கப்பட்டது. 



திருப்பூர் மாவட்டமாக மாற்றப்பட்ட பின்னர் நீதிமன்றங்கள் இருவேறு இடங்களில் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி திருப்பூர் பல்லடம் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

இந்நிலையில், தற்போது 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 நீதிமன்றங்கள், அலுவலகங்கள், கோப்புகள் வைப்பாறை, சொத்துக்கள் வைப்பரை, பயிற்சி மண்டபம், கூட்ட அரங்கம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு திறந்து வைத்தார். 



திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுவாமிநாதன், மாவட்ட நீதிபதி அல்லி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்டத்திற்கு 37 கோடி ரூபாய் மதிப்பில் நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...