அங்கொட லொக்கா பெற்றோரின் ரத்த மாதிரிகளைச் சேகரிக்க சி.பி.சி.ஐ.டி தீவிரம்: கூட்டாளியைப் பிடிக்க 2 தனிப்படை!

கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்காவின் பெற்றோர் ரத்த மாதிரிகளைச் சேகரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவரது கூட்டாளியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்காவின் பெற்றோர் ரத்த மாதிரிகளைச் சேகரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவரது கூட்டாளியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை சேரன்மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த இலங்கையின் தாதா போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவரது இறப்பு தொடர்பான விஷயங்களை ஆராய்ந்தபோது அவரது இறப்பு இயற்கையானது என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன.

இறந்த அங்கொட லொக்காவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறி அவருடன் தங்கியிருந்த அவரது காதலி அமானி தான்ஜி, மதுரை வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய 3 பேரும் அவரது உடலை மதுரைக்கு கொண்டு சென்று எரித்தனர்.

அங்கொட லொக்கா போலியான ஆவணங்கள் மூலம் பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் தங்கியுள்ளார். இது தொடர்பாக முதலில் பீளமேடு போலீசார் ஆள் மாறாட்டம் செய்ததாக விசாரணையைத் தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டது. அவர்கள் கோவையில் முகாமிட்டு அங்கொட லொக்கா தங்கியிருந்த வீடு, பயிற்சி பெற்ற ஜிம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். அவரது காதலி அமானி தான்ஜி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கோவையில் உயிரிழந்தது அங்கொட லொக்காதானா? என்பதை உறுதிசெய்ய டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர். இதற்காக அவரது பெற்றோரிடமிருந்து ரத்த மாதிரிகள் மற்றும் இலங்கை போலீசாரிடமுள்ள அங்கொட லொக்காவின் கைரேகை ஆகியவற்றைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார், கடந்த ஆகஸ்டு மாதம் ரத்தமாதிரிகள் மற்றும் கைரேகையை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத்தரக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாமதமாகியது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், இப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக கடந்த 7-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் கடிதத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி போலீசாரின் கடிதத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கை அரசுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால் ரத்த மாதிரிகள், கைரேகைகளை அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர மாநில அரசின் உள்துறை செயலகம் சார்பில் இவ்வழக்கை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கு நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.

அங்கொட லொக்காவின் கூட்டாளியான சனுக்கா தனநாயக்கா இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் அவரது கடத்தல் கூட்டாளியும் தன் அடையாளத்தை அழித்து ஏதேனும் தடயங்களை மாற்றி பதுங்கி தலைமறைவானாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...