வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 15 இளைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம்!

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 15 இளைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 15 இளைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறுவகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் இளைஞர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதாக வனச்சரகர் பழனிராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வனச்சரகர் பழனிராஜா தலைமையிலான வனத்துறையினர் குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் நடத்திய இந்தச் சோதனையின்போது இருசக்கர வாகனங்களில் வந்த 15 இளைஞர்கள் தங்களது டூவீலரில் உதகைக்கு செல்லும் வழியில் உள்ள குன்னூர் சாலை வனப்பகுதிக்குள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்த னர். அங்கு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம் என இளைஞர்களைக் கடுமையாக எச்சரித்த வனச்சரகத்தினர் இளைஞர்கள் 15 பேருக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனச்சரகர் பழனிராஜா, `வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம். அதையும் மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்கள்மீது வனப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என கடுமையாக எச்சரித்தார். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...