கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தின் முன்புறம் புறப்பட்ட கல்லூரி மாணவர்களின் கொராேனா விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வால்பாறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன் கல்லூரி முதல்வர் முரளிதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பிரச்சாரத்தில் கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேருந்து நிலையம் தேநீர் கடைகள், வளாகங்கள் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களிடம் முக கவசம் அணிவதை வலியுறுத்தியும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் அறிவுறுத்தினர்.
மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முக கவசம் அளித்து அணிய வைத்தனர்.
இந்நிகழ்வில் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முரளீதரன், வால்பாறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பெரியசாமி, பேராசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.