நீலகிரி: ஆட்டோவில் மறைத்து வைத்து கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் என்ற கிராமத்தில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவை சோதனையிட்டனர்.
அதில் சிறிய அளவிலான 50-க்கும் மேற்பட்ட பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த குன்னூர் ஆள்வார்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரை போலீஸ் டி.எஸ்.பி சுரேஷ் உத்தரவின்பேரில் வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இதையடுத்து அவர் பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.