கோவையில் 30 இடங்களில் அம்மா கிளினிக்: விரைவில் உதயம்!

கோவை: கோவையில் விரைவில் 30 இடங்களில் அம்மா கிளினிக் தொடங்கப்பட இருக்கிறது.


கோவை: கோவையில் விரைவில் 30 இடங்களில் அம்மா கிளினிக் தொடங்கப்பட இருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் கடந்த சில நாட்களாக ஏழை எளிய மக்கள் கிராமப்புறங்களில் இருந்து மருத்துவமனைக்கு வர கஷ்டமாக இருப்பதைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாடு முழுவதும் மினி அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று கோயம்புத்தூர் சிவானந்தா காலனி மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அம்மா கிளினிக்குகளை தொடக்கிவைத்தார். இதையடுத்து கோவை மாவட்டத்தில் 30 இடங்களில்அம்மா கிளினிக்குகள் தொடங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் சிங்காநல்லூர் (நெசவாளர் காலனி), மசக்காளிபாளையம், வடவள்ளி, காந்திபுரம், சிவானந்தா காலனி, செல்வபுரம், ரத்தினபுரி (முத்துக் குமரன் நகர்), தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வேடப்பட்டி, பேரூர் செட்டிபாளையம், ஆலந்துறை, போளுவாம்பட்டி, மதுக்கரை வட்டாரத்தில் வெள்ளலூர் (குடிசை மாற்று வாரிய பகுதி), மலுமிச்சம்பட்டி, எஸ்.எஸ் குளம் வட்டாரத்தில் வெள்ளானைப்பட்டி, வெள்ளமடை, காரமடை வட்டாரத்தில் ரங்கம்பாளையம், ராமபாளையம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம், சூலூர் வட்டாரத்தில் பீடம்பள்ளி, குரும்பபாளையம், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் எஸ். ஐயம்பாளையம், ஆனைமலை வட்டாரத்தில் அட்டகட்டி, தேவிப்பட்டிணம், வால்பாறையில் பெரியகல்லாறு, பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் திம்பம்பட்டி, ராசக்காபாளையம், நல்லி கவுண்டன் புதூர், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் தொண்டாமுத்தூர் ஜமீன் கொட்டாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி ஆகிய 30 இடங்களில் விரைவில் அம்மா கிளினிக்குகள் உதயமாக உள்ளன.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...