பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி ஊராட்சியில் பழுதடைந்துள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்த கோரிக்கை!

கோவை: பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியின் தூண்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியின் தூண்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

பொள்ளாச்சி வட்டம் புளியம்பட்டி ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அம்பராம்பாளையம் ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து, ஊராட்சியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

இதனிடையே, மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்போது தொட்டியின் கீழ்புறம் மற்றும் தூண்கள் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கம்பிகளும் துருப்பிடித்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "புளியம்பட்டி ஊராட்சி மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியின் தூண்கள் வலுவிழந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியை விரைவில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...