மணல் சிற்ப ஓவியப் போட்டி: தேசிய அளவில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு!

கோவை: மணல் சிற்ப ஓவிய போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

கோவை: மணல் சிற்ப ஓவிய போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

இணையவழியில் மாநில அளவில் 'கலா உத்சவ்' என்ற பெயரில் மணல் சிற்ப ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த 3 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான 'கலா உத்சவ்' போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நடப்பாண்டில் பள்ளிகள் திறக்கப்படாததால் இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநில அளவிலான போட்டி கடந்த 8-ஆம் தேதி முதல் 15 -ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பு மையத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 9 வகையான போட்டிகள் மாணவ, மாணவியருக்கு பிரத்தியேகமாக நடத்தப்பட்டன. இதில் மணல் சிற்பத்தில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி கிருத்திகா முதலிடம் பிடித்தார். பாரம்பரிய நாட்டுப்புற வாய்ப்பாட்டு இசையில் மாணவர் பிரிவில் ஆர். கே. ஸ்ரீரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் யஷ்வந்த் மற்றும் கருவி இசை பிரிவில் ஒண்டிப்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி தனுஷ்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

இவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கலைப் போட்டிகளில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...