ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.3.42 கோடி பண மோசடி; பெண் போலீஸ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.2.15 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு!

கோவை: ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்த பெண் போலீஸ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை விதித்து டான்பிட் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கோவை: ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்த பெண் போலீஸ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை விதித்து டான்பிட் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் சங்கர்(45). இவரது மனைவி காயத்ரி(39) ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு அவர்கள் அதே பகுதியில் கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி வந்தனர். இங்கு சபின் கண்ணா(25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். முதலீட்டாளர்களிடம் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் பண்ணை அமைத்துக் கொடுத்து 20 ஈமு கோழிகள் வழங்கப்படும் எனவும், மாத பராமரிப்பு தொகை ரூ 7000 கொடுக்கப்படும் என்றும் இது தவிர ஊக்கத் தொகை 20,000 வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்தனர்.

இதனை நம்பி ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்களும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணத்தை கொடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2012ம் ஆண்டு புகார் அளித்தனர்.

விசாரணையில் 73 பேரிடம் 3 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். காவலராக பணியாற்றிய காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இதனிடையே, இந்த மோசடி வழக்கு தொடர்பாக கோவை டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது, பெண் போலீஸ் காயத்ரி, அவரது கணவர் கார்த்திக் சங்கர் மற்றும் சபின் கண்ணா ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...