விஜயகாந்த் குறித்து அவதூறு: அ.தி.மு.க பிரமுகர் புகைப்படத்தை செருப்பால் அடித்து தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: விஜயகாந்த் குறித்து அவதூறாக பேசிய அ.தி.மு.க பிரமுகர் புகைப்படத்தை செருப்பால் அடித்து தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.

கோவை: விஜயகாந்த் குறித்து அவதூறாக பேசிய அ.தி.மு.க பிரமுகர் புகைப்படத்தை செருப்பால் அடித்து தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.



அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் செல்வராஜ் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைக் காணவில்லை என்று விமர்சித்திருந்தார். இது தே.மு.தி.கவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.



 தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறித்து பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் செல்வராஜைக் கண்டித்து இன்று கோவை காந்திபார்க் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் செல்வராஜைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும், செல்வராஜின் புகைப்படங்களை மிதித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். 



இதைத்தொடர்ந்து தே.மு.தி.க கோவை மாவட்டச் செயலாளர் காட்டன் செந்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் இருக்கும் எந்த நபருக்கும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி பேச அருகதை இல்லை. தொலைக்காட்சி தரும் ஆயிரம் இரண்டாயிரத்துக்காக எங்களது தலைவர் பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. இதுபோன்று பேசுவதை கண்டிக்கத்தக்கது. சிறுவாணி நீரைத் திருடிப் பிழைத்த செல்வராஜ் இன்று மாலைக்குள் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்'என்றார்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...