கோவையில் குடிநீர் கட்டணங்களை விதிக்க சூயஸ் நிறுவனத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது - அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல்!

கோவை: கோவை மாநகருக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் சூயஸ் நிறுவனம் பராமரிப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் எனவும் குடிநீர் கட்டணங்களை விதிக்க சூயஸ் நிறுவனத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகருக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் சூயஸ் நிறுவனம் பராமரிப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் எனவும் குடிநீர் கட்டணங்களை விதிக்க சூயஸ் நிறுவனத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தொடங்கி வைத்தார்.



இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் மற்றும் சிவானந்தா காலனியில் 2 அம்மா மினி கிளினிக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

மேலும், ரூ.2500 மதிப்பிலான தாய் சேய் ஊட்டச்சத்து மருந்துகள் அடங்கிய பெட்டகங்களை 11 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கிய பின்னர் விழா மேடையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், கோவையில் 70 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாகவும் முதற்கட்டமாக 30 கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.



அதனடிப்படையில், இன்று இரண்டு பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார். கோவை மாநகருக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் சூயஸ் நிறுவனம் பராமரிப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளது எனவும் அந்நிறுவனத்துக்கு குடிநீர் கட்டணங்களை குறைக்கவோ, அதிகரிக்கவோ எந்தவித அதிகாரமும் கிடையாது எனவும் எதிர்கட்சியினர் தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.



இந்த அம்மா கிளினிக் துவக்க நிகழ்வில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...