பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்: முகக்கவசம் அணிய பொதுமக்களுக்கு அறிவுரை!

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக கவர்னர் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக கவர்னர் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று 41 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று கோவை வந்தார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான பன்வாரிலால் புரோகித் இன்று சென்னையில் இருந்து கோவை வருகை தந்தார். விமானம் மூலம் வருகை தந்த அவரை கோவை விமான நிலையத்தில் கோவை கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் கமிஷனர் சுமித் சரண், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து கார் மூலம் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானை கல்யாணி மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு சாமி தரிசனம் செய்தார். பிறகு கோவிலில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினார். அதன் பின்னர் கார் மூலம் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக செல்வபுரத்தை அடுத்த முத்துசாமி காலனி பஸ் நிறுத்தம் வந்தபோது அங்கு காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து காரிலிருந்து இறங்கிய கவர்னர் அங்கிருந்த பொதுமக்களிடம், `மாஸ் ஏன் அணியவில்லை, சமூக இடைவெளியை ஏன் பின்பற்றவில்லை, கொரோனா தடுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் அவரது அறிவுரையை ஏற்று மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். அதன்பின்னர் சாமி தரிசனம் செய்ய மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்றார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...