ரயில் பயணத்தில் கோர்ட் பெண் ஊழியரின் செல்போன் திருட்டு!

கோவை: ரயில் பயணத்தின்போது கோர்ட் பெண் ஊழியரின் செல்போன், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருள்களை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.

கோவை: ரயில் பயணத்தின்போது கோர்ட் பெண் ஊழியரின் செல்போன், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருள்களை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.

ஊட்டியில் உள்ள அமீனா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவரது மனைவி சுஜாதா (வயது 43). கோர்ட் ஊழியரான இவர் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அதிகாலை 4.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் வடகோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது சுஜாதா கழிவறைக்குச் சென்று விட்டு வந்து உறங்கிவிட்டார். 

பிறகு ரயில் மேட்டுப்பாளையத்துக்கு புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சுஜாதா எழுந்து பார்த்தபோது படுக்கையில் வைத்திருந்த பேக் மற்றும் அதன் உள்ளே இருந்த செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, அலுவலக அடையாள அட்டை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...