வேலை கிடைக்காத விரக்தி: ஏ.சி மெக்கானிக் தூக்குபோட்டு தற்கொலை!

கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஏ.சி மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஏ.சி மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 22). இவர் கோவை மாசகளிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ரஞ்சித்குமாருக்கு பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. இதனால் தற்போது பார்க்கும் வேலையில் ரஞ்சித்குமார் விருப்பமில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அவர் வேலைபார்த்த நிறுவனத்திலேயே ரஞ்சித்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...