பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 650 மது பாட்டில்கள் பறிமுதல்; சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - ரூ.62,820 பணம் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 650 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சூதாட்டம் ஆடிய 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 650 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சூதாட்டம் ஆடிய 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.62,820 பணத்தை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும், பணம் வைத்து சூதாடி வருவதாகவும், பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் அங்கு விரைந்த போலீசார், சதீஷ்குமார் வீட்டை அதிரடியாக சோதனையிட்ட போது அங்கு அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அங்கிருந்த 650 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த வீட்டில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த செல்வராஜ், ராஜா, கணேஷ்குமார், சிவகுமார் உள்ளிட்ட நபர்களையும் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 62 ஆயிரத்து 820 ரூபாயை பறிமுதல் செய்து கோமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இரவு பகலாக அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து வந்ததும், லட்சக்கணக்கான ரூபாய் பணம் வைத்து சூதாடி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...