திருப்பூர்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்காவில் தொழில் நிறுவனங்களை துவங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மூலம் 63 சதவீத மானியம் வழங்கப்படுவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கிராமத்தில் துவங்க உள்ள வேதா ஆயத்த ஆடை பூங்கா குறித்து திருப்பூர் தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டம் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு தொழில்துறையினருடனான ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசுகையில், திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் தொழில் வளர்ச்சியை பரவலாகக் கொண்டு செல்லும் வகையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முதன்முறையாக ஆயத்த ஆடை பூங்கா தொடங்க உள்ளதாகவும், 36 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் செலவில் திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.
வருகின்ற 29ம் தேதி திருப்பூர் தொழில் துறையினரின் சார்பாக தையல் பயிற்சி வேதாரண்யத்தில் துவங்க இருப்பதாகவும் முதற்கட்டமாக 36 தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும், அங்கு தொழில் தொடங்க வருபவர்களுக்கு மத்திய அரசின் மூலம் 40 சதவீதமும் மாநில அரசின் மூலம் 23 சதவீதம் என 63 சதவீதம் மானியம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்த அவர், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் வங்கிக் கடன் ரத்து என்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றிருப்பதால் அவை குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் பரவலான மக்கள் தொகையின் காரணமாக தொழிற்பூங்கா, இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவை அமைக்க போதுமான இடம் இல்லாததால் காலதாமதம் ஆவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி துணிநூல் துறை இயக்குனர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.