கோவை: கோவை அருகே சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட காட்டு யானை ஒன்று விடிய விடிய சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் அச்சத்தில் உறைந்துபோயினர்.

கோவை அருகே காட்டுயானை ஒன்று சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட போலீசார் அச்சத்தில் உறைந்துபோயினர்.
கோவை அருகே ஆனைகட்டி எல்லையில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடி அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அப்போது சோதனைச்சாவடி அறை மற்றும் அதன் வெளியே போலீசார் இருந்தனர். அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று யானையை நோக்கி சத்தமிட்டபடி குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. இதனால் கோபமடைந்த யானை நாயை சிறிது தூரம் விரட்டிச் சென்றது.
இதையடுத்து மீண்டும் சோதனைச்சாவடி முன் சிறிது நேரம் நின்று விட்டு அருகிலுள்ள வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் அந்தப் பகுதியில் காலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அச்சத்தில் உறைந்துபோய் சோதனைச் சாவடிக்குள்ளேயே அமர்ந்திருந்தனர்.