திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் 3வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து 20வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் தினந்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று 3வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே டிராக்டர் வண்டியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, விவசாயிகளின் இன்றைய போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வாழ்த்திப் பேசினர்.