இடைத்தரகர்கள் இல்லாத வேளாண் திட்டத்துக்கு விவசாயிகள் வரவேற்பு: கோவையில் பாஜக மாநில விவசாய அணித்தலைவர் பேட்டி

கோவை: இடைத்தரகர்கள் இல்லாத வேளாண் திட்டத்துக்கு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்று பாஜக மாநில விவசாய அணித்தலைவர் கூறியுள்ளார்.

கோவை: இடைத்தரகர்கள் இல்லாத வேளாண் திட்டத்துக்கு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்று பாஜக மாநில விவசாய அணித்தலைவர் கூறியுள்ளார்.

கோவை பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே நாகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-




``தமிழகத்தில் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் 15 ஆம் தேதி முதல் புதிய வேளாண் சட்டம் குறித்து ஒருவார காலம் தீவிர பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பரப்புரை பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு நேரடியாக விவசாயிகளைச் சந்தித்து புதிய வேளாண் சட்டத்தின் நன்மைகள்குறித்து விளக்க இருக்கிறார்கள்.

தமிழகத்தில் 5 முக்கிய இடங்களில் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்கப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 17 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு 2.4 மடங்கும், கோதுமைக்கு 1.77 மடங்கும், சிறுதானியங்களுக்கு 75 மடங்கும், எண்ணெய் வித்துகளுக்கு 10 மடங்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் 2013 ல் கிலோ ரூ 52 ஆக இருந்தது. தற்போது குறைந்தபட்ச ஆதார விலை 99.60 ஆக இருந்து வருகிறது. இடைத்தரகர்களற்ற வேளாண் திட்டங்கள் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதே உண்மை''.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...