கோவையில் பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கார், பணம், லேப்டாப் கொள்ளையடித்த குற்றவாளி கைது..!

கோவை: கோவை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், சூர்யா நகர், பகுதியில் வசிக்கும் விஜய் என்பவருடைய மனைவி தீபா. இவர் கடந்த 27ஆம் தேதி இரவு மகாத்மா காந்தி ரோடு, மெட்ரிக் பள்ளி அருகே தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

கோவை: கோவை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், சூர்யா நகர், பகுதியில் வசிக்கும் விஜய் என்பவருடைய மனைவி தீபா. இவர் கடந்த 27ஆம் தேதி இரவு மகாத்மா காந்தி ரோடு, மெட்ரிக் பள்ளி அருகே தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். 



அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாக கூறி, காரில் இருந்த டி.வி, லேப்டாப், செல்போன், பணம் 15 ஆயிரம் அவர்கள் ஓட்டி வந்த கார் அனைத்தையும் பறித்து சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து தீபா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் 387, 506 (2), TNPWH (Tamil Nadu Prohibition of Women Harassment Act) சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் காவலர்கள் உதவியுடன் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இந்த நிலையில், நேற்று மதியம் ஒண்டிப்புதூர் அருகே, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், கடந்த 27ஆம் தேதி இரவு மகாத்மா காந்தி ரோட்டில் பயணம் செய்து கொண்டிருந்த தீபாவிடம் பணம், கார் மற்றும் இதர பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். 

விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டம் கூத்தன் பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று இரவு சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து செல்போன், லேப்டாப், கார், 15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள தலைமறைவான மீதமுள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...