பொள்ளாச்சியில் பழுதடைந்த காவலர் குடியிருப்பை இடிக்க நடந்த ஏலத்தில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் ஏலம் விட்டதால், மறு ஏலம் நடத்த வியாபாரிகள் வேண்டுகோள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பழுதடைந்த காவலர் குடியிருப்பை இடிக்க நடந்த ஏலத்தில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் ஏலம் விட்டதால், மறு ஏலம் நடத்த வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பழுதடைந்த காவலர் குடியிருப்பை இடிக்க நடந்த ஏலத்தில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் ஏலம் விட்டதால், மறு ஏலம் நடத்த வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் 40 ஆண்டுகள் பழமையான காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு 255 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் சேதமடைந்து காணப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு கருதி அங்கு வசித்து வந்த காவலர்களின் குடும்பங்களை, மாற்று இடத்திற்கு தங்குமாறு காவல்துறை நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, கிடப்பில் போடபட்ட காவலர் குடியிருப்பு பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வந்ததால், அதை இடித்துவிட்டு புதிய காவலர் குடியிருப்பு கட்டிடம் கட்ட வேண்டும் என்று காவல்துறை வட்டாரங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், முதல் கட்டமாக சேதமடைந்து உள்ள காவலர் குடியிருப்பை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அருளரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.



இதில், முதற்கட்டமாக, தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியம் மூலம் பழைய கட்டிங்களை இடிப்பதற்க்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதியில் இருந்து தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில் கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 16 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கு, காவலர் குடியிருப்பில் உள்ள சிதிலமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணியை ஏலத்தில் எடுத்தது.



இந்நிலையில், அதிக விலைக்கு ஏலம் போகும் இந்த பணியை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் குறைந்த விலைக்கு சிலர் சிண்டிகேட் அமைத்து ஏலத்தில் எடுத்ததாக, சில வியாபாரிகள் குற்றம்சாட்டினார். அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்க முன்வந்த போதும், தாமதமாக வந்ததை காரணம் காட்டி அதிகாரிகள் தங்களை ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை, என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்த ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...