திருப்பூர்: "டெல்லியில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை அவர்கள் விவசாயிகள் இல்லை இடைத்தரகர்கள் என பாஜக தலைவர் முருகன் தெரிவித்திருப்பது ஏற்கக் கூடியதல்ல. விவசாயிகளை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது. கடும் குளிரிலும் வெட்ட வெளியிலும் விவசாயிகளை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்", என, திமுகவின் மாநில மகளிர் செயலாளர், எம்.பி கனிமொழி திருப்பூரில் பேட்டியளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் ' விடியலை நோக்கி' பரப்புரையின் ஒரு பகுதியாக, எம்.பி கனிமொழி கெயில் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கை மனுவை பெற்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில்: இப்பகுதி விவசாயிகள் தான் ஊத்துக்குளியின் பெருமைக்கு காரணம். பாரத் பெட்ரோலியம், விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.உயர் மின் கோபுரம் அமைத்து, நிலத்தடியில் கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும் மேலும் இதற்கு முன் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்கள் உள்ள நில உரிமையாளர்களுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தற்போதைய சூழலில், விவசாயிகள் நிலம் தங்களிடம் இருந்து பறிக்கப்படும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் குளிரிலும் வடமாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசு அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்ட போதும், அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த வேளாண் சட்டத் திருத்த சட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கும் சட்டமாக உள்ளது. இந்த திட்டங்களை அனைவரும் எதிர்த்து வரும் நிலையில், இந்த சட்டங்களை ஆதரிப்பவர் தான் தன்னை விவசாயி என சொல்லிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
விவசாயிகளின் கருத்துக்களுக்கு காது கொடுக்காத சர்வாதிகார ஆட்சி தான் அதிமுக ஆட்சி, தனது பதவியை காத்துக்கொள்ள விவசாயிகள் பிரச்சினையை புரிந்து கொள்ளாத முதல்வர் நமக்கு தேவையா ..?
டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை எனவும் இடைத்தரகர்களும் எதிர்க்கட்சிகளும் தூண்டிவிட்டு நடத்தும் போராட்டம் என பாஜக மாநிலத் தலைவர் தலைவர் முருகன் தெரிவித்திருப்பது விவசாயிகளை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும். கடும் குளிரிலும் வெட்ட வெளியிலும் போராடும் விவசாயிகளை இவ்வாறு கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என சாடினார்.