கோவை: கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடி பகுதியில், சூலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் கையில் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், அவர் தேவராயன் பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (வயது 35), என்பதும் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக விலங்குகளை சுடுவதற்காக ஏர்கன் வகையைச் சேர்ந்த துப்பாக்கியை வாங்கியதாகவும், அதற்கான ரசீதும் போலீஸ் நிலையத்தில் அளித்த சான்றுகளும் தொலைந்து விட்டது, என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், துப்பாக்கியை ஆய்வு செய்ததில் அவரிடம் இருந்த அந்த ரக துப்பாக்கிக்கு, காவல் துறையின் அனுமதி தேவையில்லை, என்று தெரியவந்தது.
இதனையடுத்து, துப்பாக்கியை அவரிடம் ஒப்படைத்து அவரை விடுவித்தனர். துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வாலிபர் சுற்றி வந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.