திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதி கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52வது வார்டு பகுதியில் உள்ள வள்ளலார் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், ஜெயலலிதா நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி இருப்பதை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தவில்லை எனவும் அதேபோல், தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை எனவும் இதனால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்கனவே வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் பெண்கள் உட்பட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக தெரிவித்தும் காவல்துறையினர் அனுமதி அளிக்காமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வயது குழந்தை, பெண்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி வரக்கூடிய சூழ்நிலையில் அதனை பின்பற்ற வேண்டிய காவல்துறையினரே எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் 40க்கும் மேற்பட்டோரை சிறிய வாகனத்தில் ஏற்றிச் சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.