கோவை அம்மாசை கொலை வழக்கில் அப்ரூவர் மீது சிறப்பு விசாரணை. நீதிபதி அதிரடி..!

கோவை: கோவையை அதிரவைத்த அப்பாவி பெண் கொலை வழக்கில் அப்ரூவராக மாறியவர், கடைசி நேரத்தில் பல்டி அடித்ததால், அதன் மீது தனியாக விசாரணை நடத்தப்படும், என்று நீதிபதி அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையை அதிரவைத்த அப்பாவி பெண் கொலை வழக்கில் அப்ரூவராக மாறியவர், கடைசி நேரத்தில் பல்டி அடித்ததால், அதன் மீது தனியாக விசாரணை நடத்தப்படும், என்று நீதிபதி அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி அம்மாசை (46), கடந்த 2011 டிசம்பர் 11 தேதி கொலை செய்யப்பட்டார். வழக்கில் கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜவேலு (52), அவரது மனைவி வக்கீல் மோகனா (47), கார் டிரைவர் பழனிச்சாமி (48), ஆகியோருக்கு ஆயுள் சிறை விதித்து கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முகமது பாருக் நேற்று  முன்தினம் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில், மூவருடன் கைதான பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (52), அப்ரூவராக மாறி அம்மாசை கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனால், அவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். ஆனால், கோர்ட் விசாரணையின் போது அரசு தரப்புக்கு எதிராக சாட்சியமளித்தார். கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, என தீடீர் பல்டி அடித்தார். 

எனவே, குற்றம் முறை விசாரணை சட்டம் 308 -படி சாட்சி அளித்தவர், மீது தனியாக கொலை வழக்கு பதிவு செய்து, அதே நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரி அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பின்போது அளித்த உத்தரவில் அப்ரூவர் பொன்ராஜ் மீது தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த அரசு வக்கீல் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படுகிறது, என்றார்.

மேலும், அவர் மீது 302 கொலை செய்தல், 109 தூண்டுதல், 201 தடயத்தை அளித்தல் ஆகிய சட்டப் பிரிவில் தனியாக விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது என்றும் வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட சான்று பொருட்கள் மற்றும் ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், என தெரிவித்ததார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...