திருப்பூர்: உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தனியார் சேவை நிறுவனம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

உலக எய்ட்ஸ் தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் என்எம்சிடி சேவை நிறுவனம் சார்பில் எய்ட்ஸ் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வாழ்க்கைத் திட்டம் என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டார். மேலும் என் எம் சி டி சேவை நிறுவனத்தின் மூலம் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் வாழ்க்கைத் திட்டம் மூலமாக கல்வி கற்று சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.