எச்சில் இலைகளை ரோட்டில் வீசிய ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ 2000 அபராதம் - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை..!

கோவை: அன்றாடம், காலை நேரங்களில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் மற்றும் அந்த மண்டலத்துக்கு உட்பட்ட கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: அன்றாடம், காலை நேரங்களில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் மற்றும் அந்த மண்டலத்துக்கு உட்பட்ட கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று, சிங்காநல்லூர் சுப்பிரமணிய பிள்ளை வீதியில் வசிக்கும் மக்களிடம் சீராக குடிநீர் வருகிறதா? என கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர், மக்களிடம் குப்பைகளை ரோட்டில் கண்டபடி வீசாமல், குப்பை தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும், என்று அறிவுறுத்தினார். 

தொடர்ந்து, காமராஜ் ரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஓட்டல்கள் முன் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள, ஓட்டல், டீ கடை, பேக்கரி, இறைச்சி, மீன் கடை உரிமையாளர்களிடம் பேசிய ஆணையர், குப்பையை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் எனவும், உணவகங்கள் கழிவுகளை ட்ரம்களில் சேகரித்து தூய்மைப் பணியாளர்கள் வரும்பொழுது முறையாக வழங்க வேண்டும், என்று எடுத்துரைத்தார். 

ஆய்வின் போது, ஒரு உணவகத்தில் முட்டை கூடு, எச்சில் இலைகள் ரோட்டில் போடப்பட்டிருந்ததை பார்த்த கமிஷனர், கடை உரிமையாளருக்கு ரூ. 2000 அபராதம் விதித்து, உத்தரவிட்டார். 

மண்டல உதவி கமிஷனர் முருகன், உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...