கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின் பேரில் ரோந்து பணியின் பொது தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது..!

கோவை பெரியநாயக்கன் போலீஸ் நிலையத்குட்பட்ட இடிகரை, கோவிந்த நாயக்கன்பாளையம், பஸ் ஸ்டாப் அருகில் திருடுபோன பொருட்களை கண்டுபிடிப்பதற்கு மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின் பேரில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.



கோவை பெரியநாயக்கன் போலீஸ் நிலையத்குட்பட்ட இடிகரை, கோவிந்த நாயக்கன்பாளையம், பஸ் ஸ்டாப் அருகில் திருடுபோன பொருட்களை கண்டுபிடிப்பதற்கு மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின் பேரில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

பெரியநாயக்கன்பாளையம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படைகளில், இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், சுஜித்குமார், லூர்து ராஜ் மற்றும் போலீசார்கள் இடம் பெற்றிருந்தன.

இன்று காலை 9 மணி அளவில், கோட்டை பிரிவு ரயில்வே மேம்பாலம் அருகில் அதிவேகமாக வந்த ஒரு போர்டு காரை வாகன தணிக்கையில் இருந்த தனிப்படையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால், போலீசாரை கண்டதும் அவர்கள் நிறுத்தாமல் விரைந்து சென்றனர். உடனடியாக, போலீசார் அந்த வாகனத்தை விரட்டி மடக்கி பிடித்தனர்.



கோவை வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த செந்தில் (52), மணிகண்டன் (22), மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அபுல்லா என்ற முகமது (25) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், பெ.நா.பாளையம் உட்பட அன்னூர், கருமத்தம்பட்டி, சூலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, வீடு புகுந்து கொள்ளை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதை மூவரும் ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த மூன்று பேரும் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு இன்று மாலை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...