மகன் சாவில் மர்மம்..! மகனின் புகைப்படத்தை ஏந்தி, தந்தை கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை: கோவை மாவட்டம், அன்னூர் சோமனூர் பிரிவைச் சேர்ந்த துரைசாமி என்பவரது இரண்டாவது மகன் சூரியபிரகாஷ் (வயது 22), தீபாவளி அன்று பவானி ஆற்றுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.



கோவை: கோவை மாவட்டம், அன்னூர் சோமனூர் பிரிவைச் சேர்ந்த துரைசாமி என்பவரது இரண்டாவது மகன் சூரியபிரகாஷ் (வயது 22), தீபாவளி அன்று பவானி ஆற்றுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

சூரியபிரகாசை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அவர் பவானி ஆற்றங்கரையில் பிணமாக கிடப்பதாக ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சூரிய பிரகாஷின் உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது மகன் சூரியபிரகாஷ் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது தந்தை துரைசாமி இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், தனது மகன் எப்படி இறந்தார் என்பதை இதுவரை போலீசார் தெளிவுபடுத்தவில்லை எனவும் மேலும் எனது மகனுடன் இரண்டு பேர் இருந்துள்ளனர், எனவே அவர்களையும் விசாரிக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், அங்கு பவானி ஆற்றங்கரையில் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சூரியபிரகாஷ் எப்படி இறந்தான் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், துரைசாமி தனது மகன் படத்தை பேனரில் பதிவு செய்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அதனை ஏந்தி நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரைசாமியிடம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...