கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து காணப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் இன்று கிழக்கு மண்டலம் ஒண்டிப்புதூர் பார்சன் பாம்லெஜன் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், அனைவரும் கட்டாயம் முகக்கவசங்கள் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றிடவும், தங்களது வீடுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திட வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருப்பவர்களுக்கு தேவையான காய்கனி, பால் மற்றும் மளிகை பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான வசதிகளை செய்திடவேண்டுமென தொடா்புடைய அலுவலர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், அப்பகுதியில் களப்பணியாளர்களிடம் வீடு வீடாக சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிங்காநல்லூர், சுப்பிரமணிய பிள்ளை வீதியிலுள்ள பொதுமக்களிடம் குடிநீர் சீராக கிடைக்கப்பெறுகின்றதா என கேட்டறிந்த பின்னர், குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டாமல் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்டி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டுமெனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, போயர் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, கரும்புக்கடை மைதானம் ஆகிய பகுதிகளில் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவித்த பின்பு, அங்குள்ள ஆவின் பாலகத்தில் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டாமல் குப்பைத்தொட்டி கொட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சிங்காநல்லூர், காமராஜர் சாலை, பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகங்கள் முன்பு சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப்பலகைகளை அகற்றும்படி உத்தரவிட்ட பின்னர், அந்த உணவகத்திற்கு அபராதம் விதித்தார்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள உணவகங்கள், இறைச்சிக்கடைகள், மீன்கடைகள், டீ கடைகள் ஆகியவற்றின் உரிமையாளர்களிடம் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டாமல், குப்பைத்தொட்டிகளில் கொட்ட வேண்டும். டின்களில் சேகரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளாரகளிடம் வழங்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடம் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் எம்.முருகன், செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மற்றும் பணி மேற்பார்வையாளர், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.