கோவை மேட்டுப்பாளையம் அருகே தந்தை கண் முன்பு டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 4ம் வகுப்பு மாணவன் பலி!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே தந்தை கண் முன்பு டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே தந்தை கண் முன்பு டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ளது சமயபுரம். இங்குள்ள கூடுதுறை மலைப் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இளங்கோ (38). இவரது மகன் விஜய் (10), வெல்ஸ் புரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனாவால் பள்ளி மூடப்பட்டதால் விடுமுறையில் இருந்த மாணவர் விஜய் டிராக்டரின் பின்புறம் அமர்ந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று காலை கூடுதுறை மலைநெல்லி துறையில் உள்ள தனியார் தோட்டத்தில் லோகேஷ் குமார் என்பவர் டிராக்டர் ஓட்ட சென்றார். விஜய் மற்றும் அவரது தந்தை இளங்கோ டிராக்டரில் சென்றனர். தோட்டத்தில் இறங்கி உழவுப் பணியை செய்த போது மாணவர் விஜயை இறக்கிவிட்டனர். மாணவர் அங்கிருந்த வரப்பில் அமர்ந்து இருந்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர் டிராக்டரில் மாணவர் விஜய் ஏற முயன்றார்.

அப்போது, டிராக்டரில் இருந்து நிலைதடுமாறிய மாணவர் டிராக்டர் அருகிலிருந்த ரொட்டேட்டர் எந்திரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த மாணவர் கீழே விழுந்தார். அப்போது டிராக்டரின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் விஜய் துடிதுடித்து உயிரிழந்தார். தந்தையின் கண் முன்பு மகன் உயிரிழந்ததைப் பார்த்து அவரது தந்தை இளங்கோ கதறி அழுதார்.

பின்னர், விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டரில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...