கோவையில் உலக எய்ட்ஸ் தின உறுதியேற்பு நிகழ்ச்சி..! மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் பலர் உறுதிமொழி ஏற்பு!

கோவை: கோவையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின உறுதியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.



கோவை: கோவையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின உறுதியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்நாளில் எய்ட்ஸ் நோய் பரவல், பாதுகாப்பு முறை மற்றும் எய்டஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, அலுவலர்கள் உறுதிமொழியேற்றனர்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேசுகையில், கோவை மாவட்டத்தில் எய்ட்ஸால் 4000 பேர் பாதிக்கப்பட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இதில் ஆண்கள் 2,000 பேரும், பெண்கள் 1,800 பேரும் 200 குழந்தைகள் அடங்குவர் என தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் எய்ட்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக எய்ட்ஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.



இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுறை முருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...