கோவை நகரின் மையப்பகுதியில் டாக்டர். அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி வரும் டிச., 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு!

கோவை: கோவை நகரின் மையப்பகுதியில் டாக்டர். அம்பேத்கர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.


கோவை: கோவை நகரின் மையப்பகுதியில் டாக்டர். அம்பேத்கர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே அம்பேத்கர் சிலை அமைக்க கடந்த 2007ம் ஆண்டு கோவை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 13 ஆண்டுகளாகியும் அம்பேத்கர் சிலையானது அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.



கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள், தபெதிக, திராவிட தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை,தி.வி.க, மக்கள் அதிகாரம் உட்பட 20க்கும் மேற்பட்ட அமைப்பினர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியபடி அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்துவது என தீர்மானம் போடப்பட்டது. ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், நஞ்சப்பா சாலை ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவ வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி அனைத்து ஜனநாயக அமைப்புகளின் சார்பில் சிவானந்த காலனியில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் டிசம்பர் 7ம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது எனவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...