கோவை: கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கெளலிபிரவுன் ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்பணிகளை இன்று திவான்பகதூர் சாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள், சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளான சாலை அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், கேபிள்கள், 24x7 குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், தொலைத்தொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், இருபுறமும் பாதசாரிகள் நடைபாதைகள், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், சாலை ஓரங்களில் இருபுறங்களிலும் கடைகளின் முன்பு சாக்கடை கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் நீர்தேங்காமலும் மற்றும் கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் கொசு மருந்துகளை தெளிக்கப்பட வேண்டும் என சுகாதார அலுவலா்களிடம் தெரிவித்த ஆணையாளர் அவர்கள், தொடர்ந்து சம்மந்தம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, மெக்ரிக்கா சாலை, பூமார்க்கெட், ஆராஜி வீதி, தேவாங்கப்பேட்டை வீதி ஆகிய பகுதிகளில் சாலையோர வியாபாரிகளிடம் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். சேகரித்த குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய ஆணையாளர் அவர்கள் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட்சிட்டி திட்டம், சரவணக்குமார், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், குடிநீர் பிரிவு இளம் பொறியாளார்கள், திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மண்டல சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.