ஜிபிஎஸ், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவை அரசு ரத்து செய்யாவிட்டால், வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் - பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள்

கோவை: லாரிகளில் ஜிபிஎஸ் (GPS) கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவை அரசு ரத்து செய்யாவிட்டால், வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம், என பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை: லாரிகளில் ஜிபிஎஸ் (GPS) கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவை அரசு ரத்து செய்யாவிட்டால், வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம், என பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டை ஒட்டுவது, குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.



இந்நிலையில், இன்று பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையை தமிழகத்தில் அரசு கொண்டு வந்துள்ளது. லாரிகளில், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது, குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்துவது போன்ற உத்தரவுகளால் லாரி உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர், என்று அம்மனுவில் குற்றம் சாட்டினர்.

"ஏற்கனவே, லாரி தொழில் நலிந்து வரும் நிலையில், இது போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல் லாரி உரிமையாளர்கள் லாரிகளை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக முதலமைச்சர், இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்" என்று பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...